அவர்கள் தெருவில் இருப்பவர்கள், வெறிபிடித்தவர்கள், சொறிப்பிடித்தவர்கள், அருவருப்பானவர்கள். இதற்க்கு மாறாக அவர்கள் நன்றியுள்ளவர்கள், உண்மையானவர்கள், அளவில்லா அன்பை கொடுப்பவர்கள். தினசரி வாழ்க்கையில் இருந்து விடுபட மானிதர்கள் மனநிம்மதியற் று,யாரேனும் இளைப்பார கிடைப்பார்களா என்று ஏங்கி தவிக்கும் காலம் இது. ஒரே ஒரு முறையேனும் உணவின்றி தெருவில் உலாவரும் இவர்களுக்கு பாசத்தை கொடுத்து பாருங்களேன். உங்களின் தனிமையை இனிமை ஆக்கிவிடுவார்கள். அவர்கள் வால் அசைவிலும், கொஞ்சும் குரலிலும் நம்மை கட்டி போட்டுவிடுவார்கள். ஐந்தறிவு கொண்ட அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொள்வார்கள். தங்களின் சமிக்கைகள் மூலம் பேசுவார்கள். ஆம் அவர்கள் நேசமிக்கவர்கள்.
மனிதனின் முற்றிய நோய் மனிதர்களிடம் மருந்தில்லா நோய்கள் பல உண்டு. அதனுள் இந்த நோயும் ஓன்று. அதன் பெயர் "சாதி". சாதியை பல வகைகளாக பிரிந்துருப்பதை நாம் அறிவோம். எனது வீட்டில் ஒடுக்கப்பட்டவர்களை ஏசியும் பேசியும் கண்டு வளர்ந்துள்ளேன். " அதுங்கெல்லாம் எப்படி செல்போணும், துணியும் போட்டுருக்குது பாரு, இவங்களுக்கு பேப்பர் கப்ல தான் காபி கொடுக்கணும், அது எப்படி இந்த பையன் அந்த பொண்ண காதலிக்கலாம் இவனை வெட்டுனது சரி தான், இந்த பொண்ணு இந்த சாதினு தெரிந்ததும் நா பின்னாடி போறதையே நிறுத்திட்டேன், இவன் படத்தையா பாக்குற வேற ஏதும் பார்க்க கிடைக்கலையா, இவனுக்கு வோட் (vote) போட்டா வீடு புகுந்து பொண்ண தூக்கிட்டு போய்டுவாங்க " இவ்வாக்கியங்கள் எல்லாம் பதின் பருவத்திலிருந்து 80 வயதானவர்கள் வரை கூறியவை. இப்படி இவர்கள் பேசுவதை பார்த்தால் இவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் மீது பொறாமை தான் மேலோங்கி உள்ளது. என்னதான் ஆதங்கமும் கோபமும் இவர்களின் மேல் வந்தாலும் இவர்களை பார்த்து எனக்கு பாவமாக உள்ளது. விஞ்ஞானமும், ...
Comments
Post a Comment