என் சாதி
மனிதனின் முற்றிய நோய்
மனிதர்களிடம் மருந்தில்லா நோய்கள் பல உண்டு. அதனுள் இந்த நோயும் ஓன்று. அதன் பெயர் "சாதி". சாதியை பல வகைகளாக பிரிந்துருப்பதை நாம் அறிவோம். எனது வீட்டில் ஒடுக்கப்பட்டவர்களை ஏசியும் பேசியும் கண்டு வளர்ந்துள்ளேன்.
" அதுங்கெல்லாம் எப்படி செல்போணும், துணியும் போட்டுருக்குது பாரு, இவங்களுக்கு பேப்பர் கப்ல தான் காபி கொடுக்கணும், அது எப்படி இந்த பையன் அந்த பொண்ண காதலிக்கலாம் இவனை வெட்டுனது சரி தான், இந்த பொண்ணு இந்த சாதினு தெரிந்ததும் நா பின்னாடி போறதையே நிறுத்திட்டேன், இவன் படத்தையா பாக்குற வேற ஏதும் பார்க்க கிடைக்கலையா, இவனுக்கு வோட் (vote) போட்டா வீடு புகுந்து பொண்ண தூக்கிட்டு போய்டுவாங்க "
இவ்வாக்கியங்கள் எல்லாம் பதின் பருவத்திலிருந்து 80 வயதானவர்கள் வரை கூறியவை.
இப்படி இவர்கள் பேசுவதை பார்த்தால் இவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் மீது பொறாமை தான் மேலோங்கி உள்ளது. என்னதான் ஆதங்கமும் கோபமும் இவர்களின் மேல் வந்தாலும் இவர்களை பார்த்து எனக்கு பாவமாக உள்ளது. விஞ்ஞானமும், அறிவியலும் வளர வளர இவர்களின் மூளை மட்டும் வளரப்போவதே இல்லை என்பதே உண்மை.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளை கேட்டு கொண்டேதான் இருக்கிறேன். இதற்கான சரியான விடை கிடைக்கப்போவது இல்லை என்பது மட்டும் உறுதி.
இவர்களுள் பிறந்தது என்பது எனக்கு இழிவாக உள்ளது. நான் என்ன சாதி என்று சொல்வதற்கும் மிகவும் கேவலமாவும் கருதுகிறேன்.
எனது வீட்டில் நடப்பதோ சிறு துகள் மட்டுமே, ஆனால் சமூகத்தில் நடந்து கொண்டிருப்பதோ பெருந்துகள்.
இப்படிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் போராடி கொண்டிருக்கும் ஒருத்தி.
"மனிதனை மனிதனாக நேசியுங்கள் "
Part 2 (to be cntd...)
Comments
Post a Comment